Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/செப்.2ல் நெருஞ்சிக்குடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

செப்.2ல் நெருஞ்சிக்குடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

செப்.2ல் நெருஞ்சிக்குடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

செப்.2ல் நெருஞ்சிக்குடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

ADDED : ஆக 24, 2011 12:25 AM


Google News

சிவகங்கை : நெருஞ்சிக்குடி ஐயனார் கோயிலில் செப்., 2ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, ஆ.கருங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெருஞ்சிக்குடி சிரவசையுடைய ஐயனார், பூரணபுஷ்கலாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, பெரியகருப்பர், ராக்காச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு செப்.,2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சி ஆக., 31ம் தேதி காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜைகளுடன் துவங்குகிறது. அன்று மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ரக்ஷாபந்தனம் மற்றும் தீபாராதனை, முதல் கால வேள்வி நடக்கிறது. செப்.,1ம் தேதி காலை 8.15 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை நான்கு மணிக்கு மூன்றாம் கால வேள்வியும் நடக்கிறது. செப்.,2ம் தேதி காலை ஆறு மணிக்கு நான்காம் கால வேள்வி நடக்கிறது. கடம் புறப்பாட்டைத் தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு மகாஅபிஷேகம் செய்யப்படும். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.



பங்கேற்க விரும்புவோர் கோயில் செயலாளர் கிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளலாம். போன்: 98421 53535. கும்பாபிஷேகம் மற்றும் யாக பூஜைகளில் பாலசேவுக மூர்த்தி சிவாச்சாரியார், அரிகரன் சிவாச்சாரியார், சந்திரன் சிவாச்சாரியார், காரியப்ப வாத்தியார், சுகுமாரன் வாத்தியார் ஆகியோர் பங்கேற்கின்றனர். சங்கரன்கோவில் ஓதுவார் முத்துகிருஷ்ணன் தேவாரம் பாடுகிறார். விழா ஏற்பாடுகளை செயலாக்க நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us