ADDED : செப் 30, 2011 12:30 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், நேற்று எலும்பு-முறிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்த மாநில அளவிலான மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பாரதி கருத்தரங்கை துவக்கி வைத்தார். மருத்துக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் செல்லப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் வரதராஜன், உள்ளிருப்பு மருத்துவர் செல்லப்பிள்ளை ஆகியோர், சிறப்பு பேராசிரியர்களை வரவேற்றனர். எலும்பு முறிவு சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இடுப்பு எலும்பில் ஆர்த்தோபிளாஸ்டி முறை, முதுகு தண்டுவடத்தில் சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய தலைப்புகளில் டாக்டர்கள் சுகவனம், ராஜாமணி, வேலசாமி ரவிந்தரன், தீனதயாளன், விஜயராஜ் ஆகியோர் பேசினர்.