/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் புகைப்பட கண்காட்சி : ஸ்டூடியோ உரிமையாளர் சங்கம் ஏற்பாடுபுதுச்சேரியில் புகைப்பட கண்காட்சி : ஸ்டூடியோ உரிமையாளர் சங்கம் ஏற்பாடு
புதுச்சேரியில் புகைப்பட கண்காட்சி : ஸ்டூடியோ உரிமையாளர் சங்கம் ஏற்பாடு
புதுச்சேரியில் புகைப்பட கண்காட்சி : ஸ்டூடியோ உரிமையாளர் சங்கம் ஏற்பாடு
புதுச்சேரியில் புகைப்பட கண்காட்சி : ஸ்டூடியோ உரிமையாளர் சங்கம் ஏற்பாடு
ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி போட்டோ மற்றும் வீடியோ ஸ்டூடியோ உரிமையாளர்கள் சங்க தலைவர் பாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புகைப்பட தின விழாவை ஆகஸ்ட் 19ம் தேதியன்று (நாளை) கொண்டாடுவது என சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், வர்த்தக சபை வளாகத்தில், புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
கண்காட்சியை மக்கள் பார்வையிடலாம். அனைவருக்கும் அனுமதி இலவசமாகும். கண்காட்சியில் சிறந்த 3 புகைப்படங்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்வர். சிறந்த புகைப்படத்தை எடுத்த கலைஞர்களுக்குப் பரிசு வழங்கப்படும். நாளை மாலை நடக்கும் புகைப்பட தின விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.
மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விழாவில் அமைச்சர் ராஜவேலு, வக்கீல் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வரும் ஆண்டுகளிலும், புகைப்பட கண்காட்சியைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாபு கூறினார். சங்க துணைத் தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.