
தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பு: ஐந்து ஆண்டுகளில், 75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகவும், 50 சதவீதத்திற்கு அதிகமாக உற்பத்தித் திறனை உயர்த்தவும், பயிர் செய்யும் திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: கேட்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கு...
சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ்'ராகிங்'கைத் தடுக்க, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். எனவே மாணவர்கள், தைரியமாக புகாரை எழுதி போடலாம்.டவுட் தனபாலு: போடலாம் தான்... அந்தப் புகாரை நீங்க படிச்சு, நடவடிக்கை எடுக்கிறதுக்குள்ள, புறநகர் போலீஸ் கமிஷனரகத்தை, மாநகரத்தோட இணைச்சுட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு கேள்வி வருதே...!
நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான்: உலகில் உள்ள 130 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்திருக்கின்றன. மற்ற 80 நாடுகள், அதை அறவே ஒதுக்கி வைத்துள்ளன. ஆனால்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா: உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் அனைவருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
டவுட் தனபாலு: அடேயப்பா... இதுல எனக்கு ஒரு, 'டவுட்'டும் இல்லை... ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ்சுக்கும் மட்டுமில்லாம; கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்றது கடமை தான்னு நினைக்கிற ஒரு முதல்வர், உங்களுக்குப் பிறகு கிடைக்குமாங்கிறது மட்டும் தான், 'டவுட்...!'
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களைக் காப்பதற்காகவும், அறிவிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைத் தடுப்பதற்காகவும், 22ம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.
டவுட் தனபாலு: இவங்களாவது 40 வயதைக் கடந்துட்டாங்க... மும்பை தாக்குதல் வழக்குல கைதாகியிருக்கிற அஜ்மல் கசாப் என்ற சிறுபான்மை இன இளைஞன், இப்போ தான், 20 வயதைத் தொட்டிருக்கான்... அவனுக்காகவும் ஒரு பொதுக்கூட்டம் நடத்திடுங்க... இளைஞர்களுக்காக போராடின மாதிரியும் ஆச்சு; மதச்சார்பின்மையை நிலைநாட்டின மாதிரியும் ஆச்சு...!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் பணக்காரர்களும், உயர் ஜாதியினரும் தான் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆதிக்க சக்தியினர் விதித்த கட்டுப்பாடுகளால் தான், உயர் கல்வி வாய்ப்புகள், அனைவருக்கும் எட்டாக் கனியாக இருந்தன.
டவுட் தனபாலு: அப்படியா...? எட்டாக்கனியா இருந்ததா...? அப்புறம் எப்படி உங்களுக்கும், உங்க சின்ன ஐயாவுக்கும் மருத்துவப் படிப்பு, எட்டும் கனியா இருந்தது...? படிச்சு தானே இடம்பிடிச்சீங்க...? அப்புறம்...?