/உள்ளூர் செய்திகள்/தேனி/சர்க்கரை நோயாளிகளே... உங்கள் பாதங்களை கவனியுங்கள்சர்க்கரை நோயாளிகளே... உங்கள் பாதங்களை கவனியுங்கள்
சர்க்கரை நோயாளிகளே... உங்கள் பாதங்களை கவனியுங்கள்
சர்க்கரை நோயாளிகளே... உங்கள் பாதங்களை கவனியுங்கள்
சர்க்கரை நோயாளிகளே... உங்கள் பாதங்களை கவனியுங்கள்
ADDED : ஜூலை 27, 2011 10:38 PM
தேனி : சர்க்கரை நோயாளிகளில் 33 சதவீதம் பேருக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது என சதேனி சசர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் ராஜ்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உலகில் ஒவ்வொரு 30 நொடிக்கும் ஒருவர் சர்க்கரையினால் காலை இழக்கிறார். அதிகளவு ரத்தசர்க்கரை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்தகுழாய்களில் கொழுப்பு படிந்து பாதிப்பு ஏற்படுதல் போன்ற காரணங்களால் காலில் புண் ஏற்படுகிறது. இதனால் கால்களில் உணர்ச்சியின்மை ஏற்பட்டு புண் பெரிதாகி பல லட்சம் ரூபாய் செலவழித்தாலும் கால்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.
முறையான பாதப்பராமரிப்பினால் பாதங்களை பாதுகாக்கலாம். இரவில் தூங்கும் முன் மிதமான சூடுநீரில் பாதங்களை நன்றாக கழுவுதல், தினமும் பாதங்களை பரிசோதனை செய்தல், விரல் இடுக்கு தவிர மற்ற இடங்களில் கழிம்பு உபயோகித்து பாதங்களை பாதுகாத்தல் மற்றும் ஆண்டுக்கொருமுறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கால்களில் வலி, வீக்கம், நிறமாற்றம், சிறிய புண், துர்நாற்றம் இருந்தால் உடனே டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும். பாதங்களை தண்ணீர் கொண்டு கழுவிய பின்னர், நேர் கோட்டில் நகம் வெட்டியை பயன்படுத்தி நகம் வெட்ட வேண்டும். ரப்பர் செருப்பு அணியக்கூடாது. வெறும் பாதங்களில் நடக்க கூடாது. கால் ஆணி, காலில தழும்பு போன்றவற்றிற்கு தானாக சிகிச்சை செய்ய கூடாது. புகை பிடிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.