/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய ஜனநாயக கட்சிகோரிக்கைநீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய ஜனநாயக கட்சிகோரிக்கை
நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய ஜனநாயக கட்சிகோரிக்கை
நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய ஜனநாயக கட்சிகோரிக்கை
நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய ஜனநாயக கட்சிகோரிக்கை
ADDED : செப் 20, 2011 02:02 AM
புதுச்சேரி : நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என, இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தி உள்ளது.இந்திய ஜனநாயகக் கட்சியின் முதலியார்பேட்டை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், நைனார்மண்டபத்தில் நடந்தது.
மாநில செயல் தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் சத்தியவேல், சயலாளர் சத்தியானந்தம், இளைஞரணி தலைவர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரியில் பருவ மழை துவங்கி உள்ளதால், நகரம் மற்றும் கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது. எனவே நகரப் பகுதியில் உப்பளம் வாய்க்கால், செஞ்சி சாலை வாய்க்கால் மற்றும் பாதாள சாக்கடைகள், சாலையோர கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காய்த்திட்டு ஆற்றில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். நகரப் பகுதியில் மழை நீரை சேகரிக்கும் களமாக விளங்கும் வேல்ராம்பட்டு ஏரி, கணக்கன் ஏரி ஆகிய பகுதிகளுக்கு நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


