எடியூரப்பா மீதுநடவடிக்கை:கட்காரி கருத்து
எடியூரப்பா மீதுநடவடிக்கை:கட்காரி கருத்து
எடியூரப்பா மீதுநடவடிக்கை:கட்காரி கருத்து
ADDED : ஜூலை 25, 2011 09:22 PM
புதுடில்லி:லோக் ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.கர்நாடக சுரங்க ஊழல் குறித்து விசாரித்த லோக் ஆயுக்தா, தனது அறிக்கையை நாளை சமர்ப்பிக்க உள்ளது.
முன்னதாக இந்த அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல் புகாரில், முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட நான்கு அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இது குறித்து, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி குறிப்பிடுகையில், 'லோக் ஆயுக்தா அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு, எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படும். கட்சி விவகாரங்கள் எங்கள் கூட்டத்தில் தான் விவாதிக்கப்படும். இதை நாங்கள் ஊடகங்கள் முன் விவாதிக்க முடியாது' என்றார்.