/உள்ளூர் செய்திகள்/மதுரை/புதர் மண்டி சாக்கடையாய் மாறிய திருமங்கலம் குண்டாறுபுதர் மண்டி சாக்கடையாய் மாறிய திருமங்கலம் குண்டாறு
புதர் மண்டி சாக்கடையாய் மாறிய திருமங்கலம் குண்டாறு
புதர் மண்டி சாக்கடையாய் மாறிய திருமங்கலம் குண்டாறு
புதர் மண்டி சாக்கடையாய் மாறிய திருமங்கலம் குண்டாறு
ADDED : செப் 21, 2011 12:09 AM
திருமங்கலம் : திருமங்கலத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் குண்டாறு சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது.
முட்புதர்களும் மண்டி கிடக்கின்றன. உசிலம்பட்டி, எழுமலைப் பகுதி மலைகளில் இருந்து மழைக்காலங்களில் காட்டாறு வெள்ளம் சிந்துபட்டி, பன்னீர்குண்டு, சாத்தங்குடி, கண்டுகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள், கிணறுகளை நிரப்பி பின்னர் திருமங்கலத்தையொட்டி ஆறாக செல்கிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் இப்பகுதியில் உள்ளன. பல ஆண்டுகளாக குண்டாறு தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் சிறிய ஓடையாக மாறி விட்டது. திருமங்கலத்திலிருந்து கழிவுநீர் இதில் கலக்கிறது. நடுவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்ல வழியில்லை. திருமங்கலத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் இருந்தும் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. மழைக்காலம் துவங்கிய நிலையில் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புக்கள், புதர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். கழிவுநீர் கலக்காமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.