Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு குண்டர் சட்டத்தில் இருவர் கைது

ADDED : அக் 04, 2011 01:52 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் போஸ்ட்மேன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தச்சநல்லூர் தேனீர்குளம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. போஸ்ட்மேன். இவர் கடந்த ஆகஸ்ட் 20ம்தேதி தச்சநல்லூர் பாலாஜி அவென்யூ ஐந்தாவது தெருவில் தபால் பட்டுவாடா செய்த போது முன்விரோதம் காரணமாக சிலர் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட தளவாய்புரம் பெருமாள் கோவில் தெற்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம்(24), தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் மல்லிகை நடுத்தெருவை சேர்ந்த ஜோசப் பொன்ராஜை(23) குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ, உதவி கமிஷனர் ஸ்டான்லி ஜோன்ஸ், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் பரிந்துரை செய்தனர். கமிஷனர் வரதராஜூ உத்தரவுப்படி இருவரும் நேற்று குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாளை. சிறையில் அடைக்கப்பட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us