/உள்ளூர் செய்திகள்/மதுரை/குடிநீர் வடிகால் வாரியத்தை அரசுத்துறையாக்க கோரிக்கைகுடிநீர் வடிகால் வாரியத்தை அரசுத்துறையாக்க கோரிக்கை
குடிநீர் வடிகால் வாரியத்தை அரசுத்துறையாக்க கோரிக்கை
குடிநீர் வடிகால் வாரியத்தை அரசுத்துறையாக்க கோரிக்கை
குடிநீர் வடிகால் வாரியத்தை அரசுத்துறையாக்க கோரிக்கை
ADDED : செப் 21, 2011 12:09 AM
மதுரை : குடிநீர் வடிகால் வாரியத்தை, அரசுத்துறையாக மாற்றம் செய்ய ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரையில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்க தென்மண்டல கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புரவலர் சக்ரபாணி முன்னிலை வகித்தார். உதவி தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். பொருளாளர் முனிச்சாமி நிதி நிலை அறிக்கை வாசித்தார். ஆண்டு மலரை குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் கோதண்டராமன் வெளியிட, மூத்த உறுப்பினர் மாணிக்கம் பெற்று கொண்டார். தீர்மானம்: பொதுத்துறை நிறுவனமாக குடிநீர் வடிகால் வாரியம் 1971ல் மாற்றப்பட்டது. வாரிய துணை விதிப்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வாரிய ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், இது நடைமுறையில் இல்லை. பலன்கள் உரிய காலத்தில் ஓய்வூதியர் களுக்கு கிடைப்பதில்லை. எனவே, குடிநீர் வடிகால் வாரியத்தை பழையபடி அரசுத்துறையாக மாற்ற வேண்டும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை செயலாளர் சுரேந்திரநாத் நன்றி கூறினார்.