/உள்ளூர் செய்திகள்/சேலம்/முதல் முறையாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண் போட்டிமுதல் முறையாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண் போட்டி
முதல் முறையாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண் போட்டி
முதல் முறையாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண் போட்டி
முதல் முறையாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண் போட்டி
ADDED : அக் 06, 2011 02:17 AM
மேட்டூர்: மேட்டூர் தாலுகா, கோல்நாயக்கன்பட்டி பஞ்., தலைவர் பதவிக்கு, முதல்முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார்.
மேட்டூர் தாலுகா, கொளத்தூர் ஒன்றியம், கோல்நாயக்கன்பட்டி பஞ்.,ல்
ரெட்டியூர், சாணாவூர், தெற்கத்திகாடு போன்ற கிராமங்கள் உள்ளது. கடந்த 1958
முதல் பஞ்., தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. இதுவரை கோல்நாயக்கன்பட்டி
பஞ்., உறுப்பினர் பதவிக்கு மட்டுமே பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை.
வரும் உள்ளாட்சி தேர்தலில் கோல்நாயக்கன்பட்டி பஞ்., தலைவருக்கு
முதல்முறையாக பெண் வேட்பாளர் கலா என்பவர் போட்டியிடுகிறார். இது தவிர,
ஐந்து ஆண் வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.
இதுவரை ஆண் வேட்பாளர்களே பஞ்., தலைவராக இருந்த நிலையில், முதன்முறையாக
தலைவருக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்பது
ஓட்டுப்பதிவில் தெரியும்.


