/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி : அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் தருவிப்புபச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி : அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் தருவிப்பு
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி : அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் தருவிப்பு
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி : அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் தருவிப்பு
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி : அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் தருவிப்பு
ADDED : ஆக 01, 2011 10:00 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு துவக்கப்பட் டுள்ளது. இப்பிரிவுக்கென இரண்டு டாக்டர்கள், மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பெரிச்சிபாளையத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக தினமும் 40க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 20 முதல் 25 குழந்தைகள் பிறக்கின்றன. சுகப்பிரசவம் ஆன குழந்தை மற்றும் தாய் நான்கு நாட்களிலும், ஆப்ரேஷன் செய்து பிறந்த குழந்தை மற்றும் தாய் ஒரு வாரத்திலும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டதும், அடுத்த 10 நாட்களுக்கு கீரை, காய்கறி போன்ற சத்தான ஆகாரங்கள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. என்றாலும் கூட, சில குழந்தைகள், பிறக்கும்போதே ஊட்டச்சத்து குறைவால் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. பிறந்த பின், அழாமல் இருப்பது; எடை குறைவாக பிறப்பது; சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்படுவது உள்ளிட்ட சிக்கல் சில குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. அத்தகைய பிரச்னை ஏற்படும்போது, அக்குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, 'பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு' ஏற்படுத்த, தேசிய சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்க மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. அத்துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவமனையை பார்வையிட்டு, 3,000 சதுரடியில் 20 படுக்கைகளுடன் 'பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு' துவக்க, ஒன்பது லட்சம் ரூபாய் ஒதுக்கினர். அதில், இரண்டு லட்சம் ரூபாய் மின்சாதன உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டன. மீதியுள்ள தொகையை பயன்படுத்தி, குழந்தையின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க 'வாமர்'; மஞ்சள் காமலை உள்ளதா என அறிய 'போட்டோதெரபி' கருவி, மூச்சுத்திணறலை தவிர்க்க 'வென்டிலேட்டர்' கருவி, எடை குறைவாக இருந்தால், குளூக்கோஸ் தர தனிக்கருவி ஆகியவை வாங்கப்பட்டன. இக்கருவிகளை பொருத்தும் பணி முடிந்துள்ளது; இந்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கூறியதாவது:அரசு மருத்துவமனையில் பிறக்கும் 100 சதவீத குழந்தைகளில் 10 சதவீத குழந்தைகளுக்கு உடனடி அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனை போல், அனைத்து சேவைகளும் அரசு மருத்துவமனையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு' துவக்கப்பட்டுள்ளது. இதுவரை, பச்சிளம் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இனி, 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்கும்.
இப்பிரிவை கவனித்துக் கொள்ள இரண்டு குழந்தை நல மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறையும். பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் கிருமி பாதிப்பு அதிகம் இருக்கக்கூடும் என்பதால், இப்பிரிவுக்குள் மருத்துவர்கள் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும், என்றார்.