/உள்ளூர் செய்திகள்/தேனி/ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் கூடலூரில் கூட்ட நெரிசல்ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் கூடலூரில் கூட்ட நெரிசல்
ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் கூடலூரில் கூட்ட நெரிசல்
ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் கூடலூரில் கூட்ட நெரிசல்
ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் கூடலூரில் கூட்ட நெரிசல்
ADDED : செப் 30, 2011 01:30 AM
கூடலூர் : வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் செய்ய வந்ததால் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூடலூரில் நகராட்சி தலைவருக்கான அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். காலை 11 மணிக்கு துவங்கிய வேட்பு மனுத்தாக்கல் மாலை 3 மணி வரை இருந்த போதிலும், பகல் 1.30 மணிக்கு மேல் நேரம் சரியில்லை என்ற காரணத்தால் அனைத்துக் கட்சிகளும் 1.30 மணிக்குள் மனுத்தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கட்சியின் சார்பில் தலைவர் வேட்பாளர்களுக்கும், வார்டு வேட்பாளர்களுக்கும் தலா ஐந்து பேர் வீதம் உடன் வந்ததால் மனுத்தாக்கல் செய்ய வந்தனர். போலீசார் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தினர்.