/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அக்டோபர் 1ம் தேதியிலிருந்து ஆய்வு எட்டயபுரம் பகுதி வாகன ஓட்டிகளே உஷார்அக்டோபர் 1ம் தேதியிலிருந்து ஆய்வு எட்டயபுரம் பகுதி வாகன ஓட்டிகளே உஷார்
அக்டோபர் 1ம் தேதியிலிருந்து ஆய்வு எட்டயபுரம் பகுதி வாகன ஓட்டிகளே உஷார்
அக்டோபர் 1ம் தேதியிலிருந்து ஆய்வு எட்டயபுரம் பகுதி வாகன ஓட்டிகளே உஷார்
அக்டோபர் 1ம் தேதியிலிருந்து ஆய்வு எட்டயபுரம் பகுதி வாகன ஓட்டிகளே உஷார்
ADDED : செப் 22, 2011 12:09 AM
எட்டயபுரம் : வாகனங்களில் பதிவு எண் பலகை மத்திய மோட்டார் வாகன விதியின்படி
சரியான அளவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து
எட்டயபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கோவில்பட்டி மோட்டார் வாகன
ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி மோட்டார் வாகன
ஆய்வாளர் சிவகுமார் மேலும் தெரிவித்துள்ளதாவது, வாகனத்தில் பதிவு எண்
பலகையில் (நம்பர் பிளேட்) எழுத வேண்டிய பதிவு எண் அளவு வாகனத்தில் பதிவு
எண் பலகை (நம்பர் பிளேட்) மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51ன் படி
சரியான அளவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பதிவு எண் பலகையில் பதிவு எண்ணை
தவிர வேறு எதுவும் எழுதப்பட்டிருக்கக் கூடாது. மீறுவோர் மீது மோட்டார் வாகன
சட்டப்படி போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை
எடுக்கப்படும். பதிவு எண் பலகையில் (நம்பர் பிளேட்டில்) எழுத வேண்டிய பதிவு
எண் அளவு வருமாறு, வாகனம் பைக் நம்பர் பிளேட் அளவு பின்புற நம்பர் அளவு
உயரம் 40எம்எம் பின்புற எழுத்து (டிஎன்) அளவு 35 எம்எம் தடிமன் 7 எம்எம்
இடைவெளி 5எம்எம் முன்புறம் நம்பர் அன்ட் எழுத்து அளவு உயரம் 30 எம்எம்
தடிமன் 5எம்எம் இடைவெளி 5எம்எம் ஆகும். 70 சிசிகுறைவான பைக் முன்புற நம்பர்
அன் எழுத்து அளவு உயரம் 15எம்எம் தடிமன் 2 புள்ளி 5எம்எம் இடைவெளி 2
புள்ளி 5 எம்எம் ஆகும். ஆட்டோ முன் மற்றும் பின்புற நம்பர் அன்ட் எழுத்து
அளவு உயரம் 35எம்எம் தடிமன் 7எம்எம் இடைவெளி 5எம்எம் ஆகும். கார் முன்
மற்றும் பின்புற நம்பரின் எழுத்து அளவு உயரம் 40 எம்எம் தடிமன் 7எம்எம்
இடைவெளி 5எம்எம். லாரி, பஸ் பிற வாகனங்கள்நம்பர் பிளேட் முன் மற்றும்
பின்புறம் நம்பர் அன்ட் எழுத்து அளவு உயரம் 65எம்.எம் தடிமன் 10 எம்.எம்
இடைவெளி 10எம்.எம் ஆகும். மத்திய மோட்டார் வாகன விதியின் படி சரியான அளவில்
நம்பர் பிளேட்டில் எழுத்துக்கள், எண்கள் எழுதப்படாத வாகனங்கள் சிறை
பிடித்து போலீசில் ஒப்படைக்கப்படும். மேலும் அந்த வாகனத்தின் பெர்மிட்
ரத்து செய்யப்படும். இது சம்பந்தமான வாகன சோதனை எட்டயபுரம் பகுதியில்
அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கோவில்பட்டி
மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.