/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சிஊட்டி கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சி
ஊட்டி கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சி
ஊட்டி கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சி
ஊட்டி கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கு 6 நாள் பயிற்சி
ADDED : ஆக 28, 2011 01:03 AM
ஊட்டி : கனரா வங்கி மூலம் விவசாயிகளுக்கான 6 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம், இயற்கை வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல், நவீன பால் பண்ணை பராமரிப்பு, பசுமை குடில் மலர் சாகுபடி, மூலிகை செடிகள் வளர்த்தல், அலங்கார பூ செடிகள் வளர்த்தல், மலை காய்கறிகள் பயிரிடுதல் உள்ளிட்டவைகள் பற்றி 6 நாட்கள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.18 முதல் 45 வரை வயது வரம்பும், மேலும் இப்பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. சேர விரும்புபவர்கள் தங்களது பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை எழுதி,'கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் 8/10 யு.எஸ்.எஸ்.எஸ் வளாகம், சேரிங்கிராஸ், ஊட்டி' என்ற முகவரிக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்பிக்க வேண்டும்.


