தாக்குதலில் போலீசாரின் பங்கு? கெஜ்ரிவால் சந்தேகம்
தாக்குதலில் போலீசாரின் பங்கு? கெஜ்ரிவால் சந்தேகம்
தாக்குதலில் போலீசாரின் பங்கு? கெஜ்ரிவால் சந்தேகம்
ADDED : அக் 14, 2011 09:23 AM
புதுடில்லி: பிரஷாந்த் பூஷன் மற்றும் அன்னா ஆதரவாளர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சூழ்நிலையில், இது குறித்து ஆலோசிக்க அன்னா ஹசாரேவை, அர்விந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார்.
இது குறித்து அவர் டிவிக்கு பேட்டியளிக்கையில், இந்த தாக்குதல்கள் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளன. இதில் போலீசாரின் பங்கு குறித்து ஆராயப்பட வேண்டும். தாக்குதல்கள் அனைத்தும் போலீசாரின் முன்னிலையில் நடந்துள்ளன. ஆனால் அவர்களை இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக உயர் அதிகாரிகள் ஏதேனும் அவர்களை வழிநடத்துகிறார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், எங்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை தாக்குததன் மூலம் அவர்கள் தேசத்திற்கு உதவி செய்யவில்லை என கூறினார்.


