ADDED : செப் 15, 2011 05:38 AM
ஆமதாபாத் : சத்பவனா மிஷன் என்ற பெயரில் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வரும் சனிக்கிழமை முதல் மூன்றுநாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்., கட்சியும் அதே நாட்களில் உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்துள்ளது. சபர்மதி ஆசிரமத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக மாநில காங்., கட்சியின் மூத்த தலைவர் சங்கர்சிங் விஹெல்லா தெரிவித்துள்ளார்.


