/உள்ளூர் செய்திகள்/தேனி/இடஒதுக்கீட்டில் மாற்றம்? மக்களை குழப்பும் கட்சிகள்இடஒதுக்கீட்டில் மாற்றம்? மக்களை குழப்பும் கட்சிகள்
இடஒதுக்கீட்டில் மாற்றம்? மக்களை குழப்பும் கட்சிகள்
இடஒதுக்கீட்டில் மாற்றம்? மக்களை குழப்பும் கட்சிகள்
இடஒதுக்கீட்டில் மாற்றம்? மக்களை குழப்பும் கட்சிகள்
ADDED : செப் 15, 2011 10:04 PM
தேனி : தேனி மாவட்ட நகராட்சிகள் அனைத்தும் பொதுப்பிரிவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் மக்களிடம் தகவல் பரப்பி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தேனி நகராட்சி எஸ்.சி., பிரிவினருக்கும், போடி, பெரியகுளம், சின்னமனூர், கம்பம், கூடலூர் நகராட்சிகள் பெண் களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு முறை மாற்றப்பட்டு ஆறு நகராட்சி களும் பொதுப் பிரிவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அ.தி.மு.க., தே.மு.தி.க., உட்பட அரசியல் கட்சியினர் மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அரசு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை' என்றனர்.