/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/துன்பத்தை கண்டு பெண்கள் துவண்டு விடக்கூடாதுதுன்பத்தை கண்டு பெண்கள் துவண்டு விடக்கூடாது
துன்பத்தை கண்டு பெண்கள் துவண்டு விடக்கூடாது
துன்பத்தை கண்டு பெண்கள் துவண்டு விடக்கூடாது
துன்பத்தை கண்டு பெண்கள் துவண்டு விடக்கூடாது
ADDED : செப் 15, 2011 04:21 AM
புதுச்சேரி:பெண் குழந்தைகள் துன்பத்தை கண்டு துவண்டுவிடக் கூடாது என அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சம்மாள் பேசினார்.
லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில், பெண்கள் பாதுகாப்பு
குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி துணை முதல்வர் பெருமாள் தலைமை
தாங்கினார். தலைமையாசிரியை ஜெயந்தி முன்னிலை வகித்தார்.முகாமில் அனைத்து
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சம்மாள் பேசியதாவது;
இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் சிதைந்துபோய், பெற்றோர் இருவருமே
வேலைக்கு செல்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வளரும் பெண் குழந்தைகள்
தனிமைப்படுத்தப்பட்டு விடுகின்றனர். அன்புக்கு ஏங்கும் பெண் குழந்தைகள்
அரவணைப்பு கிடைக்கவில்லை என வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகின்றனர். சில
நேரங்களில் தற்கொலை போன்ற துயரமான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.இதுபோன்ற
பெண் குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு முக்கியம். பெண் குழந்தைகளும்
துன்பத்தை கண்டு துவண்டுவிட கூடாது. பிரச்னைகளை தன்னம்பிக்கையுடன்
எதிர்கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட கற்றுக் கொள்ள
வேண்டும்.பெற்றோர் தான் சிறந்த வழிகாட்டி என்பதை உணர்ந்து கவனமாக படிக்க
வேண்டும். இவ்வாறு இன்ஸ்பெக்டர் பேசினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை
அனைவருக்கும் கல்வி இயக்கம் செய்திருந்தது. நிகழ்ச்சியில் மாணவர் நல
ஆலோசகர்கள் சம்பூர்ணம், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


