துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து
துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து
துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து

சென்னை:''தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களின் நலனுக்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்,'' என, துப்புரவு பணியாளரின் தேசிய கமிஷன் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சூழல், வாழ்வாதார நிலை போன்றவை திருப்திகரமாக இல்லையென, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷனின் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் நேற்று அவர் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட நாட்டின் பல மாநகரங்களில் துப்புரவு பணியாளர்களின் தொழில் சூழல், வாழ்வாதார நிலை போன்றவை கவலையளிப்பதாக உள்ளது.
துப்புரவு பணிகள் செய்யும் போது கையுறை போன்றவை வழங்க வேண்டும் என்பதும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.துப்புரவு பணியாளர்களின் தொழில் சூழல், வாழ்வாதார நிலை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அளவில் துப்புரவு பணியாளர் கமிஷன் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.துப்புரவு பணியாளர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் தாட்கோ நிறுவனம் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் விரைவில் முன்வைக்கப்படும்.தமிழகத்தில், கடந்த 20 ஆண்டுகளில், துப்புரவு பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டதும், அதன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.