/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வி.சி., கட்சியினர் 3 பேர் மீது வழக்குவி.சி., கட்சியினர் 3 பேர் மீது வழக்கு
வி.சி., கட்சியினர் 3 பேர் மீது வழக்கு
வி.சி., கட்சியினர் 3 பேர் மீது வழக்கு
வி.சி., கட்சியினர் 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2011 12:13 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் உட்கட்சி பூசலில், மாநில நிர்வாகி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தர்மபுரி போலீஸார் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கோவிந்தன் மற்றும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில நிர்வாகி நந்தன் ஆகியோருக்கு இடையில் கோஷ்டி பூசல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு தர்மபுரி ரயில் ஸ்டேஷன் அருகே இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் நந்தன் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றபோது, தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்த வசந்த் மற்றும் கோவிந்தன் ஆகியோர் நந்தனின் கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்தனர். இது தொடர்பாக இரு கோஷ்டியினரும் பலமாக தாக்கி கொண்டனர். படுகாயம் அடைந்த நந்தன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இரு கோஷ்டியினரும் தனித்தனியாக தர்மபுரி போலீஸில் அளித்த புகாரின் பேரில் நந்தன் மற்றும் கோவிந்தன், வசந்த் ஆகிய மூவரின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாநில நிர்வாகிகளின் தலையீட்டின் பேரில், இரு கோஷ்டியினரும் வழக்குகளை வாபஸ் பெற்றனர்.