ADDED : செப் 07, 2011 10:55 PM
கடலூர்:சித்தரசூர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது
வழங்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணிபுரியும்
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது
வழங்கப்படுகிறது.இந்தாண்டு அண்ணாகிராமம் அடுத்த சித்தரசூர் நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் இளஞ்செழியனுக்கு சென்னையில் நடந்த விழாவில் கல்வித்துறை
அமைச்சர் சண்முகம் நல்லாசிரியர் விருதை வழங்கினார்.