/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு
ADDED : ஜூலை 25, 2011 12:11 AM
புதுச்சேரி : முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 8வது மாநாடு நேற்று நடந்தது.
புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 8வது மாநாடு நேற்று காலை நடந்தது. வணிக அவையில் நடந்த மாநாட்டில் அரிகிருஷ்ணன், பரசுராமன், பழநி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சண்முகசுந்தரம் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொருளாளர் முத்து தொடக்கி வைத்து பேசினார்.
மாநாடு தொடர்பாக செயல் அறிக்கையை சங்க செயலாளர் அன்பழகன் வாசித்தார். மாநாட்டில் தமிழ்நாடு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமண பெருமாள், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முத்து, புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்ற பொதுச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். சங்க நிர்வாகி பாலு நன்றி கூறினார்.