Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காலி மனைகளில் குப்பை குவியல்கள்பழனிராஜா உடையார் நகரில் சுகாதார சீர்கேடு

காலி மனைகளில் குப்பை குவியல்கள்பழனிராஜா உடையார் நகரில் சுகாதார சீர்கேடு

காலி மனைகளில் குப்பை குவியல்கள்பழனிராஜா உடையார் நகரில் சுகாதார சீர்கேடு

காலி மனைகளில் குப்பை குவியல்கள்பழனிராஜா உடையார் நகரில் சுகாதார சீர்கேடு

ADDED : செப் 15, 2011 04:07 AM


Google News
புதுச்சேரி:பழனிராஜா உடையார் நகரில் உள்ள காலி மனைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி இ.சி.ஆர். சாலை ராஜராஜேஸ்வரி திருமண நிலையம் பின்புறம் பழனிராஜா உடையார் நகர், பிரைஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்கள் அமைந்துள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வினோபா நகர், ஆனந்த ரங்கப்பிள்ளை நகர் ஆகிய பகுதிகளில் இருந்து இ.சி.ஆர்., சாலைக்கு வருபவர்கள் இந்த வழியைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள காலி மனைகளில் சிலர் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இவ்வாறு தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள், மலை போல் குவிந்து கிடக்கிறது.இப்பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே காலிமனைகளில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். தற்போது, மழை நாள் என்பதால் குப்பைகள் மக்கி போவதோடு மட்டுமின்றி, பயங்கர துர்நாற்றமும் வீசுகிறது. இந்த வழியாக செல்பவர்கள் மூக்கைக் கட்டிக்கொண்டு தான் செல்கின்றனர்.இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே காலிமனைகளில் உள்ள குப்பைகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும். இப்பகுதியில் குப்பைகள் கொட்டும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us