/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சுவாமிமலை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழாசுவாமிமலை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா
சுவாமிமலை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா
சுவாமிமலை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா
சுவாமிமலை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா
ADDED : ஜூலை 26, 2011 12:33 AM
கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்று தெப்பத்திருவிழா நடந்தது.
முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையாகிய சிவபெருமானுக்கு மகன் முருகன் உபதேசம் செய்த தலமாக, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் விளங்குவதால், இது குரு உபதேச ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதகிருத்திகையின் போது தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத கிருத்திகை தினமான நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, கோயிலில் நீண்ட கியூவில் நின்று பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. பின் நேத்ர புஷ்கரணி தெப்ப குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி தெப்பத்திருவிழா இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் அறநிலையத்துறையின் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தென்னரசு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.