/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நகைக் கடையில் கேமரா போலீஸ் எஸ்.பி.வேண்டுகோள்நகைக் கடையில் கேமரா போலீஸ் எஸ்.பி.வேண்டுகோள்
நகைக் கடையில் கேமரா போலீஸ் எஸ்.பி.வேண்டுகோள்
நகைக் கடையில் கேமரா போலீஸ் எஸ்.பி.வேண்டுகோள்
நகைக் கடையில் கேமரா போலீஸ் எஸ்.பி.வேண்டுகோள்
ADDED : ஆக 09, 2011 01:10 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் நேற்று ஆறு சம்பவங்களில் ரூ.
30 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டு எஸ்.பி. பன்னீர்செல்வம் கூறியதாவது:நகைக் கடை கொள்ளை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்கி விட்டது.மேலும் சில ஏற்பாடுகள், வேறு சில வழிகளிலும் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ரோந்து முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளோம். மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் அலாரம் பொருத்துமாறு அறிவுறுத்துகிறோம்.பெரிய கடைகளில் கேமிராக்களை வைக்கலாம். சில கடைகள் சேர்ந்து துடிப்புமிக்க முன்னாள் ராணுவத்தினரை இரவு நேர பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டால், போலீசாரும் இணைந்து ரோந்து வரும் போது திருட்டுக்கள் குறையும். மாவட்ட முழுவதும் குற்றங்கள் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்க பத்திரிக்கையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், சமூக சேவகர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


