ADDED : ஜூலை 30, 2011 12:06 AM
நாமக்கல்: நாமக்கல் அருகே புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை, மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.நாமக்கல், முல்லை நகரில், 3.20 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழாவுக்கு யூனியன் சேர்மன் ராணி தலைமை வகித்தார். முல்லைநகர் சங்கத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் காந்திச்செல்வன் பங்கேற்று புதிய ரேஷன் கடையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.