/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தையில் இரும்பு தடுப்பு மீது அரசு பஸ் மோதல்: 10 பேர் காயம்குடந்தையில் இரும்பு தடுப்பு மீது அரசு பஸ் மோதல்: 10 பேர் காயம்
குடந்தையில் இரும்பு தடுப்பு மீது அரசு பஸ் மோதல்: 10 பேர் காயம்
குடந்தையில் இரும்பு தடுப்பு மீது அரசு பஸ் மோதல்: 10 பேர் காயம்
குடந்தையில் இரும்பு தடுப்பு மீது அரசு பஸ் மோதல்: 10 பேர் காயம்
ADDED : ஆக 09, 2011 01:29 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் டிரைவரின் கவனக்குறைவாலும், போலீசாரின் திடீர் போக்குவரத்து மாற்றங்களாலும் இரும்பு தடுப்பு மீது அரசு பஸ் மோதியதில், பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.கும்பகோணம் பஸ்ஸ்டாண்டிலிருந்து மயிலாடுதுறை மற்றும் அணைக்கரை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அனைத்தும் 60 அடி சாலை, காமராஜர் ரோடு, ரயில்வே ஸ்டேசன், நால்ரோடு வழியாக செல்வது வழக்கம். அதே போல் தஞ்சை மெயின் ரோட்டிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் ஆயிகுளம், மீன்மார்கெட், நால்ரோடு வழியாக பஸ்ஸ்டாண்ட் செல்வது வழக்கம்.கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட் செல்ல மீன்மார்கெட், ஜாகிர்உசேன் ரோடு, 60 அடி சாலை வழியாக அவசரகால வழித்தடம் ஒன்று உள்ளது.
இந்த சாலையில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் செல்வதால், இந்த சாலை எப்போதும் நெருக்கடியாக இருக்கும். இந்த சாலையை தனியார் பஸ் ஓட்டுனர்கள் குறுக்கு வழியில் புகுந்து பஸ்ஸ்டாண்ட் செல்வதை தடுக்கவும், பஸ்ஸ்டாண்ட்லிருந்து குறுக்கு வழியில் வெளியே வருவதை தடுக்கும் விதத்தில் கும்பகோணம் போக்குவரத்து போலீஸார், மீன்மார்கெட் அருகே இரும்பு தடுப்பு கட்டைகளை அமைத்திருந்தனர்.போக்குவரத்து மாற்றம் ஏற்படும் நேரத்தில் மட்டும் போலீஸார் இரும்பு தடுப்புகளை அகற்றி கொள்வது வழக்கம்.
ஆனால், தஞ்சை மெயின்ரோட்டிலிருந்து வரும் மினி பஸ்களும், தனியார் பஸ்களும் போக்குவரத்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு குறுக்கு வழியில் புகுந்து சென்றதாலும் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் லாரி ஒன்று இரும்பு தடுப்பின் மீது மோதியதாலும் இரும்பு தடுப்பு அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரகாலமாக மினி பஸ், அரசு பஸ், தனியார் பஸ் அனைத்தும் இந்த குறுக்கு வழியில் தான் சென்று வந்தது. நேற்று காலை போக்குவரத்து பிரிவு போலீஸார் மீண்டும் அந்த இரும்பு தடுப்பை அமைத்தனர். அதனால், நேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்வதற்காக சென்ற அரசு பஸ் டிரைவர், தன்னுடைய கவனக்குறைவால் நேராக இரும்பு தடுப்பை மீறி ஓட்ட முயற்சித்ததால். பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தும், முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதில் பஸ் டிரைவர் உட்பட 10 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அடிக்கடி தடுப்புகள் வைப்பதும், எடுப்பதுமாக செய்து வந்ததால் ஓட்டுனர்களும் குறுக்கு வழியில் செல்லவே முயல்கின்றனர். மேலும் தடுப்பு வைக்கப்படும்போது அதன் நடுவில் எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைப்பதில்லை. சாலையின் குறுக்கே செல்லும் தடுப்பு திடீரென கவனிக்கும்போது தான் தெரிகிறது. இது நன்கு தெரியும் படி எச்சரிக்கை பலகைகள் வைப்பதால் மட்டுமே மேலும் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க முடியும். தடுப்பில் மோதி ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே போக்குவரத்து போலீசார் தடுப்பு வைக்கப்படும் இடத்தில் எச்சரிக்கை பலகைகளும் அதன் நடுவில் பெரியதாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


