/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி விழாதிருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி விழா
திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி விழா
திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி விழா
திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி விழா
ADDED : ஆக 30, 2011 12:03 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறை ப்பூண்டி ரோட்டரி சங்கம், டெ ல்டா ரோட்டரி சங்கம் சார்பில், மாவட்ட ஆளுநர் வருகை விழா நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செயலாளர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார். மாவ ட்ட ஆளுநர் அசோகா, துணை ஆளுநர் இளங்கோவன், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க மாவ ட்ட நிர்வாகி கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 71 முறை ரத்ததானம் செய்த சங்க உறுப்பினர் பெ ருமாள் மற்றும் தொடர்ச்சியாக ரத்தம் வழங்கிய துணை ஆளுனர் இளங்கோவன், தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சதா பத்மநாதன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. 40 மாணவியருக்கு சீருடை வழங்கப்பட்டது. நெடும்பழம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தண்ணீர் 'டேங்க்' வழங்கப்பட்டது. கால்நடை சிகிச்சை முகாமில் பணியாற்றிய ஆறு டாக்டர்கள், டிராஃபிக் பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ., கண்ணதாசன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க தலைவர் செல்வகணபதி, ரோட்டரி சங்கத்துக்கு 27 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். டெல்டா ரோட்டரி சங்க தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.