Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மணல் கொள்ளையால் வரி ஏய்ப்பு: வரித்துறைக்கு அமலாக்க துறை கடிதம்

மணல் கொள்ளையால் வரி ஏய்ப்பு: வரித்துறைக்கு அமலாக்க துறை கடிதம்

மணல் கொள்ளையால் வரி ஏய்ப்பு: வரித்துறைக்கு அமலாக்க துறை கடிதம்

மணல் கொள்ளையால் வரி ஏய்ப்பு: வரித்துறைக்கு அமலாக்க துறை கடிதம்

ADDED : ஜூன் 26, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
சென்னை : மணல் கொள்ளை விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதால், அதுபற்றி விசாரிக்கும்படி, வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி., விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசின் நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ள குவாரிகளில், மணல் கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குவாரிகளில் மணல் அள்ளிய ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி., நிபுணர்கள் உதவியுடன் அறிவியல்பூர்வமாக, எந்தளவு ஆழத்திற்கு, எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என, ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில், அரசு 490 ஏக்கர் அளவுக்கு தான் மணல் அள்ள அனுமதி அளித்து உள்ளது. ஆனால், இரண்டு ஆண்டில், 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை பதிவேட்டில், 4.05 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக பதிவு உள்ளது. ஆனால், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளி உள்ளனர். இதன் வாயிலாக, 4,730 கோடி ரூபாய்க்கு மணல் விற்பனை நடந்துள்ளது. இருந்தும், ஆவணத்தில், 36.45 கோடி ரூபாய் வருவாய் தான் காட்டப்பட்டுள்ளது. கூடுதலாக மணல் அள்ளி, மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மிகப்பெரிய அளவில், வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்குமாறு, வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி., விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us