/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜி.எஸ்.டி., வரி 28 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்: நிதியமைச்சரிடம் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை ஜி.எஸ்.டி., வரி 28 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்: நிதியமைச்சரிடம் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ஜி.எஸ்.டி., வரி 28 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்: நிதியமைச்சரிடம் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ஜி.எஸ்.டி., வரி 28 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்: நிதியமைச்சரிடம் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ஜி.எஸ்.டி., வரி 28 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்: நிதியமைச்சரிடம் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 07:09 AM
மதுரை: ''வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி.,யில் 28 சதவீதம் வரை வரி விகிதம் உள்ளதால் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கோரிக்கை வைத்தார்.
மனுவில் அவர் தெரிவித்ததாவது: ஒரு தொழில் நிறுவனத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்காக செலுத்தப்படும் (ஜி.எஸ்.டி.) வரியில் உள்ளீட்டு (ஐ.டி.சி.) வரியை எடுக்கக்கூடாது என்ற ஜி.எஸ்.டி. சட்டப்பிரிவு 17 (5) சி, டி யை நீக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யில் சேவைகளுக்கான பரிவர்த்தனை செய்பவர்கள் அல்லது சரக்குகள், சேவைகள் இரண்டையும் கையாள்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. பதிவுக்கான வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தவேண்டும்.
ஜி.எஸ்.டி.,யில் 28 சதவீதம் வரை வரி விகிதம் உள்ளது. இதனால் நேர்மையான வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வரி ஏய்ப்பையும் ஊக்குவிக்கும். எனவே 28 சதவீத வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நோட்டீஸ் தொடர்பான துறை ரீதியான எந்த அறிவிப்பாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட வணிகர்களின் தனிப்பட்ட இ மெயில் முகவரிக்கோ அல்லது வணிக நிறுவன முகவரிக்கோ கடிதம் அனுப்ப வேண்டும். இதனால் குறு, சிறு வணிகர்களுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முடியும்.
பெட்ரோலியம் கச்சா, அதிவேக டீசல், மோட்டார் ஸ்பிரிட், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளுக்கு ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பண வீக்க சுமையைக் குறைக்க பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை உயர்வதோடு பல்வேறு துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். 2022 அக்.1 முதல் வரிவிலக்கு புதுப்பிக்கப்படாததால் ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதியின் மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற முடியவில்லை. எனவே கப்பல் சரக்கு கட்டணம் மற்றும் விமான சரக்கு கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.