/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோவில் நில அபகரிப்பு வழக்கில் பெண் கைதுகோவில் நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது
கோவில் நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது
கோவில் நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது
கோவில் நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது
ADDED : ஆக 19, 2011 02:41 AM
நாமக்கல்: நாமக்கல், புதுச்சத்திரம் அருகே கண்ணூர்பட்டியில் பெரியாண்டவர்
கோவில் உள்ளது.
அந்த கோவில் அருகே சேலம் மாவட்டம், ஆத்தூர்,
ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுமதி (50) என்பவருக்கு சொந்தமான இரண்டு
சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலம் உட்பட கோவிலுக்கு சொந்தமான, 905 சதுர அடி
நிலத்தையும் சேர்த்து, சுமதி தனது மகள்கள் மூவருக்கும் எழுதி
கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், நாமக்கல் நில மோசடிப்
பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து
விசாரித்ததில், சுமதி நில மோசடியில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது.
அதையடுத்து சுமதியை, போலீஸார் கைது செய்து, நாமக்கல் குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


