Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சேலம் சுயே., மேயர் வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு

சேலம் சுயே., மேயர் வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு

சேலம் சுயே., மேயர் வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு

சேலம் சுயே., மேயர் வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு

ADDED : அக் 04, 2011 02:28 PM


Google News

சேலம்: சேலத்தில் சுயேட்சை மேயர் வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் பள்ளிவாசல் முத்தவல்லியாக இருப்பவர் ஹாரூன் ரஷீத். இவருக்கு அப்பகுதியில் உள்ள பிலால் பாட்ஷா என்பவர் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிலால் பாட்ஷாவை அழைத்து அசிஸ்டெண்ட் கமிஷனர் கோபி விசாரணை நடத்தி வந்தார். இதுகுறித்து விவரம் அறிந்த முஸ்லிம்கள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் திரண்டனர். அப்போது அங்கு வந்த சுயேட்சை மேயர் வேட்பாளர் ரகமத் நிஷா, கூடியிருந்தவர்களைப் பார்த்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரகமத் நிஷாவின் கார் கண்ணாடியை அங்கு கூடியிருந்தவர்கள் உடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us