/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் சேர்மனுக்கு 21 பேர் மனு : அ.தி.மு.க.,வில் அதிருப்தி வேட்பாளர்விழுப்புரம் சேர்மனுக்கு 21 பேர் மனு : அ.தி.மு.க.,வில் அதிருப்தி வேட்பாளர்
விழுப்புரம் சேர்மனுக்கு 21 பேர் மனு : அ.தி.மு.க.,வில் அதிருப்தி வேட்பாளர்
விழுப்புரம் சேர்மனுக்கு 21 பேர் மனு : அ.தி.மு.க.,வில் அதிருப்தி வேட்பாளர்
விழுப்புரம் சேர்மனுக்கு 21 பேர் மனு : அ.தி.மு.க.,வில் அதிருப்தி வேட்பாளர்
ADDED : செப் 30, 2011 01:43 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகர சேர்மன் பதவிக்கு அரசியல் கட்சியினர்
உள்ளிட்ட 21 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சியில் உள்
ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் கடைசி நாளான நேற்று விறுவிறுப்பாக
நடந்தது. சேர்மன் பதவிகளுக்கு கமிஷனர் சிவக்குமார் மனுக்களை பெற்றார்.
வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான மனுக் களை பொறியாளர் பார்த்திபன்,
நகரமைப்பு அலுவலர் சேகர், மேலாளர் சுந்தரேசனும் பெற்றனர்.நகர சேர்மன்
பதவிக்கு தி.மு.க., வேட்பாளர் சக்கரை கட்சியினருடன் ஊர்வலமாக வந்து மனு
தாக்கல் செய்தனர். சேர்மன் ஜனகராஜ், முன்னாள் எம்.எல். ஏ., புஷ்பராஜ், நகர
செயலாளர் பாலாஜி, தளபதி நற்பணி மன்ற செயலா ளர் செல்வராஜ் உடனிருந்தனர்.
பா.ம.க., வேட்பாளர் பெருமாள் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். மாநில
துணைத் தலைவர் தங்கஜோதி, மாவட்ட செயலர் பழனிவேல் உடனிருந்தனர்.
தே.மு.தி.க., வேட்பாளர் துரைசாமி ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம். எல்.ஏ., நகர நிர்வாகிகள் பாபு,
ஆதவன்முத்து உடனிருந்தனர். காங்., வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி
நீடித்ததால், வர்த்தகர் அணியைச் சேர்ந்த அஞ்சலை செல்வராஜ், தங்கபாலு
ஆதரவாளர்கள் ஜோதி ராஜா, ராயர் ஆகிய மூன்று பேரும் மனு தாக்கல் செய்தனர்.
காங்., நகர தலைவர் குலாம்மொய்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும்
அ.தி.மு.க., சார்பில் நூர்முகமதுவும், வி.சி., கட்சி சார்பில் சோமசுந்தரம்
மனு தாக்கல் செய்தனர். சுயேச்சையாக செந்தில், செந்தில்குமார்,
தட்சணாமூர்த்தி, செந்தமிழ்செல்வன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். கடைசி
நாளான நேற்று வரை 21 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ம.தி.மு.க., சார்பில்
சேர்மன் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. நகர செயலாளர் சம்மந்தம்,
முன்னாள் நகர செயலாளர் ஜானகிராஜா, மாஜி கவுன்சிலர் புஷ்பலதா, சீனுவாசன்
ஆகியோர் கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர். அதிருப்தி வேட்பாளர்:
அ.தி.மு.க., சார்பில் கட்சி தலைமை அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளர்
வழக்கறிஞர் பாஸ்கரன் ஏற்கனவே மனு தாக்கல் செய்து, தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.