/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-காங்.,-இந்திய கம்யூ.,வேட்பு மனுசிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-காங்.,-இந்திய கம்யூ.,வேட்பு மனு
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-காங்.,-இந்திய கம்யூ.,வேட்பு மனு
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-காங்.,-இந்திய கம்யூ.,வேட்பு மனு
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-காங்.,-இந்திய கம்யூ.,வேட்பு மனு
சிவகிரி : சிவகிரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிட அதிமுக.,- காங்.,-இந்திய கம்யூ.,சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிவகிரியில் நேற்று இந்திய கம்யூ.,-மார்க்சிஸ்ட் கம்யூ.,-தேமுதிக கூட்டணி சார்பில் இந்திய கம்யூ.,கட்சியின் வேட்பாளர் ரணவீறு டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் தென்காசி எம்.பி.,லிங்கம், சிபிஐ வட்டார செயலாளர் சிங்காரவேல், நகர செயலாளர் கதிரேசன், மாவட்ட விவசாய சங்க தலைவர் தங்கவேலு, மணி, குருசாமி, சிபிஎம் சார்பில் வட்டார செயலாளர் ராமசுப்பு, நகர செயலாளர் கிருஷ்ணன், மாரியப்பன், தேமுதிக சார்பில் நகர செயலாளர் சவுந்தரராஜன், இளைஞரணி செயலாளர் முனியாண்டி, அவைத்தலைவர் ரத்தினம், குருசாமி உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகிரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு காங்.,வேட்பாளராக சேதுராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வேட்பு மனு மனுதாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது காங்.,மாவட்ட பொதுச் செயலாளரும் முன்னாள் டவுன் பஞ்., தலைவருமான போஸ், வட்டார தலைவர் திருஞானம், நகர தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் குருசாமிபாண்டியன், வட்டார செயலாளர் பரமசிவன், நகர செயலாளர் கென்னடி, காந்தி உட்பட அனைத்து வார்டு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.