Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'அண்ணாமலை தலைமையில் மூன்று மடங்கு ஓட்டு அதிகரிப்பு'

'அண்ணாமலை தலைமையில் மூன்று மடங்கு ஓட்டு அதிகரிப்பு'

'அண்ணாமலை தலைமையில் மூன்று மடங்கு ஓட்டு அதிகரிப்பு'

'அண்ணாமலை தலைமையில் மூன்று மடங்கு ஓட்டு அதிகரிப்பு'

ADDED : ஜூன் 07, 2024 03:59 AM


Google News
Latest Tamil News
ஹிந்து மக்கள் கட்சி தலைவர், அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வரும் ஐந்தாண்டு பொற்கால ஆட்சியாக இருக்கும். தமிழகத்தில் 40 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றும் எந்த பிரயோஜனம் இல்லை. மக்களின் நலனுக்காக அவர்கள் மத்திய அரசோடு இணைந்து போக வேண்டும்.

அரசியலில் மோடியை எதிர்த்தாலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் கிடைப்பதற்காக ஒத்துப்போக வேண்டும். பா.ஜ., கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் மோடி தோற்று விட்டது போல் கூறுகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிரதமர் மோடி நல்ல அரசாக நடத்துவார். எதிர்க்கட்சிகளை மோடி அரவணைத்து செல்வார். தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில், 3 மடங்கு அதிக ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. 2026ல் தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.

தமிழகத்தில் காவல்துறையை தி.மு.க., தவறாக பயன்படுத்துகிறது. உபி, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஓட்டு ஜிகாத் நிகழ்த்தப்பட்டுள்ளது. உ.பி.,யில் பா.ஜ., மீண்டு வரும். இவ்வாறு கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us