/உள்ளூர் செய்திகள்/கரூர்/கே.வி.பி., 374வது புதிய கிளை திறப்பு விழா:தாந்தோணிமலையில் அமைச்சர் பங்கேற்புகே.வி.பி., 374வது புதிய கிளை திறப்பு விழா:தாந்தோணிமலையில் அமைச்சர் பங்கேற்பு
கே.வி.பி., 374வது புதிய கிளை திறப்பு விழா:தாந்தோணிமலையில் அமைச்சர் பங்கேற்பு
கே.வி.பி., 374வது புதிய கிளை திறப்பு விழா:தாந்தோணிமலையில் அமைச்சர் பங்கேற்பு
கே.வி.பி., 374வது புதிய கிளை திறப்பு விழா:தாந்தோணிமலையில் அமைச்சர் பங்கேற்பு
கரூர்: தாந்தோணிமலையில் கரூர் வைஸ்யா வங்கியின் 374வது புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் வங்கி மேலாண் இயக்குனர் வெங்கட்ராமன் கூறியதாவது: கரூர் வைஸ்யா வங்கியின் வர்த்தகம் 44,900 கோடி, மொத்த டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்து 900 கோடி ஆகும். இதில் 18,800 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.117 கோடி ஆகும். கடந்த ஆண்டு வங்கியின் நிகர லாபம் ரூ.417 கோடியாகும். தமிழ்நாட்டில் சிறந்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தனியார் துறை வங்கிகளில் சிறந்த வங்கி என்ற விருதை பெற்று உள்ளது. இந்த வங்கியின் தொழில்நுட்பத்தில் ஏடிஎம் மூலம் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், இன்டர் நெட் பேங்கிங், ஆர்டிஜிஎஸ், மொபைல் ஏ.டி.எம்., ஆகிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சூர்ய நராயணன், தாந்தோனி நகர்மன்ற தலைவர் ரேவதி ஜெயராஜ், தி நர்சிங் கல்லூரி சிதம்பரம், அல்லி சிதம்பரம், டாக்டர்.மோகன், குளோபல் இம்பெக்ஸ் செந்தில், அவதார் இண்டர்நேஷனல் வாசு, வங்கி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். கிளை மேலாளர் செந்தில் நன்றி கூறினார்.