Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/நடந்து சென்ற மூவர் மீதுலாரி மோதல்: பெண் பலி

நடந்து சென்ற மூவர் மீதுலாரி மோதல்: பெண் பலி

நடந்து சென்ற மூவர் மீதுலாரி மோதல்: பெண் பலி

நடந்து சென்ற மூவர் மீதுலாரி மோதல்: பெண் பலி

ADDED : ஜூலை 11, 2011 04:16 AM


Google News
மணப்பாறை: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற மூவர் மீது லாரி மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சிறுவன் உள்பட இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.திருச்சி அருகே வையம்பட்டி, சக்கம்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மனைவி புஷ்பம் (42). இவரது மகன் கோபால் (9). இவரது உறவினர் பொன்னம்மாள் (42). மூவரும் நடுப்பட்டி அருகே வத்தமணியாரம்பட்டியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்கச் சென்றனர். திருமணம் முடிந்ததும் மூவரும் காலை 10.30 மணிக்கு நடுப்பட்டி நோக்கி நடந்து வந்தனர்.அப்போது, திண்டுக்கல் - இனாம்குளத்தூருக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. முசிறியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் லாரியை ஓட்டி வந்தார். திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாடை இழந்து இவர்கள் மீது மோதியது.இதில், புஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோபால், பொன்னம்மாள் ஆகிய இருவரும் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.லாரி டிரைவர் பிரகாஷ், லாரியை நிறுத்தாமல், வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் லாரியுடன் சரண்டைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக புஷ்பம் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us