/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் அடுத்தாண்டு பி.எம்.எஸ்., மாநில மாநாடு?கரூரில் அடுத்தாண்டு பி.எம்.எஸ்., மாநில மாநாடு?
கரூரில் அடுத்தாண்டு பி.எம்.எஸ்., மாநில மாநாடு?
கரூரில் அடுத்தாண்டு பி.எம்.எஸ்., மாநில மாநாடு?
கரூரில் அடுத்தாண்டு பி.எம்.எஸ்., மாநில மாநாடு?
ADDED : செப் 27, 2011 12:03 AM
கரூர்: பாரதீய மஸ்தூர் சங்க தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கரூர் நகரத்தார் மண்டபத்தில் மாநில தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நவம்பர் 23 ம் தேதி டெல்லியில் நடக்கும் பேரணிக்கு தமிழகம் சார்பில் அனை த்து மாவட்டங்களிலிருந்து பங்கேற்பது, வரும் அக்டோபர் 14ம் தேதி பி.எம்.எஸ்., நிறுவனர் ஸ்ரீமான் தத்தோபந்த் தெங்கடிஜி நினைவு தினத்தில் மாவட்டந்தோறும் ஹால்மீட்டிங் நடத்துதல், 2012 மார்ச் 2,3 தேதிகளில் பி.எம்.எஸ்., 10வது மாநில மாநாடு கரூரில் நடத்துவது, அடு த்த மாநில செயற்குழு கூட்டம் நவம்பர் 5,6 தேதிகளில் திருப்பூரில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ், அகில பாரத பொறுப்பாளர் சுகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.