/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்
திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்
திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்
திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்
ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியின் வீரவாஞ்சிநாதன் சாரணர் படையினர், ஒரு நாள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
தலைமையாசிரியர் மூர்த்தி தலைமையில், சாரண அமைப்பு ஆணையர் கிருபாகரன் முன்னிலையில், சாரண ஆசிரியர் மோகன்ராஜ் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட நடைப்பயணத்தில் 32 சாரணர்கள் பங்கேற்றனர்.
நடைப் பயணம் மேற்கொண்ட சாரணர்கள் புது பஸ் நிலையம், கால்நடை மருத்துவமனை, வனத்துறை, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்றனர். சாரண மாணவர்களுக்கு விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்தும், மண் வகைகள் பற்றியும் விளக்கப்பட்டது.