Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க தடை

திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க தடை

திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க தடை

திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க தடை

ADDED : ஜூலை 14, 2011 11:43 PM


Google News

மானாமதுரை : திருப்புவனம் பேரூராட்சிக்குப்பட்ட வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., துர்கா தலைமையில் விவசாயிகள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், கனிமவள உதவி இயக்குனர் சாம்பசிவம், வேளாண் இணை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார் வைத்தியலிங்கம் பங்கேற்றனர். இதில் தேளி கிராம புல எண் 135ல் வைகை ஆற்றுப்புறம்போக்கு திருப்புவனம் பேரூராட்சிக்குப்பட்டு வருகிறது. இங்கு மதுரை, அருப்புக்கோட்டை, திருப்புவனம், கட்டனூர், 48 கிராமங்களுக்குரிய குடிநீர் கிணறு உள்ளது. மணல் குவாரி அமைத்தால் நீர்வள ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படுவதால் மணல் குவாரி அமைக்க கூடாது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. திருப்புவனம் கண்மாய் பொறுப்பாளர்கள் ரெகுராமன், கணநாதன், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரன், அயோத்தி, தென்னை விவசாய சங்க தலைவர் பாவா புகர்தீன், கானூர் கண்மாய் தலைவர் உலகநாதன், செல்லப்பனேந்தல் கிராமநிர்வாகிகள் பெரியசாமி, கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us