சத்தீஸ்கர்: ஊரக வேலை திட்ட ஊழல் புகார்: தீர்வுகாண லோக்பால்
சத்தீஸ்கர்: ஊரக வேலை திட்ட ஊழல் புகார்: தீர்வுகாண லோக்பால்
சத்தீஸ்கர்: ஊரக வேலை திட்ட ஊழல் புகார்: தீர்வுகாண லோக்பால்
ADDED : ஜூலை 15, 2011 04:25 AM
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் பெருமளவு நடப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து உரிய விசாரணை நடத்த மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் லோக்பால் அமைப்புகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசின் கனவு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.. நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 100 நாள் வேலை எனும் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் கிராமவாசிகளுக்கு கூலி தொகையும் உடனடியாக வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 மாவட்டங்களி்ல் இத்தி்ட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இத்திட்டத்தில் ஊழல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இவற்றை ஒழித்துக்கட்ட சத்தீஸ்கர் அரசு புதிய முறையினை கொண்டுவந்துளளது. இங்குள்ள 16 மாவட்டங்களில் லோக்பால் அமைப்பை உருவாக்கியுள்ளது. எனவே ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் தெரிந்தால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், இங்கு இலவசமாக புகார் தெரிவிக்கலாம், இப்புகாரினை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென அமைப்பட்டுள்ள தனி அலுவலகப்பிரிவுகள் அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களில் விசாரணை நடத்தப்படும். ஊழல் புரிந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், போலீசில் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் இந்த லோக்பால் அமைப்பு பரிந்துரைக்கும். இதன் மூலம் 45 நாட்களில் தீர்வு கிடைக்கும்.