வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது
வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது
வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது
ADDED : ஜூன் 23, 2025 07:27 PM

நாகர்கோவில்: வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாகோடு பேரூராட்சி இளநிலை பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டிக்காட்டு விளை, பாகோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் ஜெபின். இவர் தனக்கு சொந்தமான 8 சென்ட் நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக கடந்த 19-06-2025 அன்று பாகோடு பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது இளநிலை உதவியாளர் விஜி, வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் கூறியபடி ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை நேற்று இளநிலை உதவியாளர் விஜியிடம் ஜெபின் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விஜியை கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பேரூராட்சியில் எலக்ட்ரீசியன் மற்றும் பில் கலெக்டர் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.