நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை ஊழல்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை ஊழல்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை ஊழல்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 23, 2025 06:28 PM

சென்னை: நீட் தேர்வில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கை:
நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல். RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.