ADDED : ஜூலை 27, 2011 03:11 AM
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே, வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை
விபத்துகளில், இருவர், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.திருவாரூர்
மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன்.
இவரது மகன் சண்முகசுந்தரம், 27.
சென்னையில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். 24ம் தேதி மாலை,
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், மனைவியை
பார்ப்பதற்காக, நண்பர் ராஜியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.சென்னை
செல்வதற்காக, இரவு 11 மணிக்கு, சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம்
அருகே சென்றபோது, சென்னையிலிருந்து குடியாத்தம் நோக்கிச் சென்ற பஸ் மீது,
மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்தக் காயமடைந்த, சண்முகசுந்தரம் அதே
இடத்தில் பரிதாபமாக இறந்தார். ராஜி சென்னை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு
விபத்து: திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்
அய்யர்தேவர். இவரது மகன் சேவகமூர்த்தி, 26. லாரி டிரைவர். நேற்று முன்தினம்
மாலை 5 மணிக்கு, சென்னையிலிருந்து வேலூருக்கு, ஐஷர் மினி லாரியை ஓட்டிச்
சென்றார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் செல்லும்போது,
கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. பலத்தக் காயமடைந்த
சேவகமூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.