/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சைரன் ஒலியை தவறாகபயன்படுத்தும் ஆம்புலன்ஸ்சைரன் ஒலியை தவறாகபயன்படுத்தும் ஆம்புலன்ஸ்
சைரன் ஒலியை தவறாகபயன்படுத்தும் ஆம்புலன்ஸ்
சைரன் ஒலியை தவறாகபயன்படுத்தும் ஆம்புலன்ஸ்
சைரன் ஒலியை தவறாகபயன்படுத்தும் ஆம்புலன்ஸ்
ADDED : ஆக 20, 2011 11:52 PM
திருப்பூர்:நோயாளி இல்லாதபோதும், சில ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி
எழுப்பிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூரில் உள்ள பிரதான
ரோடுகளில் காலை முதல் இரவு வரை, வாகன போக்குவரத்து பரபரப்பாக
காணப்படுகிறது; அதிகளவில் வாகனங்கள் செல்வதால், பல இடங்களில் நெரிசல்
ஏற்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களையும், விபத்தில் காயம்
அடைந்தவர்களையும், நிறைமாத கர்ப்பிணி பெண்களையும் சிகிச்சைக்காக
மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.அவசர
சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளவர்களை, போக்குவரத்து
நெரிசல் மிகுந்த ரோடுகளில், விரைவில் அழைத்துச் செல்ல வசதியாக சைரன் ஒலி
எழுப்பப்படுகிறது. ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கும் நேரங்களில் ரோடுகளில்
செல்வோர் ஒதுங்கி, அவ்வாகனத்துக்கு வழிவிடுவது வழக்கம்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்கள் சிலரால் 30க்கும் மேற்பட்ட
ஆம்புலன்ஸ் வாகனங்கள், திருப்பூரில் இயக்கப்படுகின்றன; சில ஆம்புலன்ஸ்கள்,
ஆட்கள் இல்லாத போதும், சைரன் ஒலி எழுப்பியபடி செல்கின்றன. மருத்துவமனையில்
அவசரமாக சேர்க்க வேண்டியவர்களை அழைத்துச் செல்லும் நேரங்களில் மட்டுமே,
சைரன் ஒலி எழுப்ப வேண்டும்.மருத்துவமனை பகுதிக்கு அருகில், ஸ்டாண்டில்
நிறுத்த செல்லும்போதும் கூட, சில ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலி
எழுப்பப்படுகிறது. நெரிசலான ரோடுகளில், மெதுவாக செல்ல விருப்பமின்றி சைரனை
ஒலிக்கச்செய்தபடி, வேகமாக அப்பகுதியை கடக்கின்றனர். இச்செயல் தவறானது.
எனவே, ஆம்புலன்ஸ் இயக்கும் டிரைவர்களை அழைத்து போலீசார்அறிவுரை வழங்க
வேண்டும்.


