/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவிற்குசுப்பையா பெயர் சூட்ட கோரிக்கைரெயின்போ நகர் சிறுவர் பூங்காவிற்குசுப்பையா பெயர் சூட்ட கோரிக்கை
ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவிற்குசுப்பையா பெயர் சூட்ட கோரிக்கை
ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவிற்குசுப்பையா பெயர் சூட்ட கோரிக்கை
ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவிற்குசுப்பையா பெயர் சூட்ட கோரிக்கை
ADDED : செப் 21, 2011 11:27 PM
புதுச்சேரி:சிறுவர் பூங்காவிற்கு தியாகி சுப்பையா பெயரை சூட்ட இந்திய
கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய கம்யூ., கட்சி ரெயின்போ நகர் கிளை
மாநாட்டிற்கு தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்
துரைசெல்வம் துவக்க உரையாற்றினார். கிளை செயலாளர் மாதவராமன், நடந்த வேலைகள்
சம்பந்தமாக பேசினார். நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகரன், கட்சியின்
எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.பின், புதிய நிர்வாகிகள் தேர்வு
நடந்தது. கிளை செயலாளராக மாதவராமன், துணை செயலாளராக கோவிந்தன், பொருளாளராக
அல்தாப் உசேன், கமிட்டி உறுப்பினர்களாக தட்சிணாமூர்த்தி, ஜெயின், கிருஷ்ணன்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில், ரெயின்போ நகரில் உள்ள சிறுவர்
பூங்காவை சரி செய்ய வேண்டும். அங்கு, நடை பயிற்சிக்கான பாதையை சீரமைக்க
வேண்டும். சிறுவர் பூங்கா மற்றும் முதியோர் நடைபாதைக்கு சுப்பையா பெயர்
வைக்க வேண்டும். செல்லான் நகரின் 1, 7வது மற்றும் 8வது குறுக்குத் தெரு
சாலைகளை சீரமைக்க வேண்டும். கிருஷ்ணா நகரில் இருந்து ரெயின்போ நகருக்கு
வரும் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.