/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/யோகா-கராத்தே போட்டிகளில் செந்துறை மாணவன் முதலிடம்யோகா-கராத்தே போட்டிகளில் செந்துறை மாணவன் முதலிடம்
யோகா-கராத்தே போட்டிகளில் செந்துறை மாணவன் முதலிடம்
யோகா-கராத்தே போட்டிகளில் செந்துறை மாணவன் முதலிடம்
யோகா-கராத்தே போட்டிகளில் செந்துறை மாணவன் முதலிடம்
ADDED : செப் 09, 2011 01:59 AM
அரியலூர்: சென்னையில் நடந்த அகில இந்திய யோகா மற்றும் கராத்தே போட்டிகளில், செந்துறை மாணவன் ஹரிஹரன் முதலிடம் பெற்றார்.
அகில இந்திய கராத்தே மற்றும் யோகா போட்டிகள், சென்னை ஜெ.ஜெ., ஸ்டேடியத்தில் கடந்த 3, 4ம் தேதிகளில் நடந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்போட்டிகளில், கராத்தே மற்றும் யோகா பயிற்சியாளர் பாபு தலைமையில், செந்துறை செயின்ட் தெரசா மெட்ரிக் பள்ளி, விருத்தாஜலம் பி.வி.பி., மெட்ரிக் பள்ளி, பாத்திமா மெட்ரிக் பள்ளி, மாஸ்டர் அகடமி, பொன்பரப்பி அரசு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். கராத்தே மற்றும் யோகா போட்டிகளுக்கான முதல் பரிசை செந்துறை மாணவன் ஹரிஹரன் பெற்றார். மேலும் செந்துறையை சேர்ந்த சூரியா, பொன்மனச்செல்வன், சக்திவேல், விக்னேஸ்வர், விருத்தாஜலத்தை சேர்ந்த முகமது ஸர்ஜன், சங்கரையா, அரவிந்தன், பொன்பரப்பியை சேர்ந்த மகாதேவி, ரமேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட மாணவ, மாணவிகளும் யோகா மற்றும் கராத்தே போட்டிகளில் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் யோகா மாஸ்டர் பாபு உள்ளிட்டோரை, ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.