/உள்ளூர் செய்திகள்/சேலம்/விசைத்தறி பட்டறைகளில் பேக்டரி சட்டம் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்விசைத்தறி பட்டறைகளில் பேக்டரி சட்டம் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்
விசைத்தறி பட்டறைகளில் பேக்டரி சட்டம் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்
விசைத்தறி பட்டறைகளில் பேக்டரி சட்டம் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்
விசைத்தறி பட்டறைகளில் பேக்டரி சட்டம் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்
ADDED : செப் 13, 2011 02:06 AM
சேலம் : விசைத்தறி பட்டறைகளில், தொழிற்சாலைகள் சட்டம் அமல்படுத்த வலியுறுத்தி, ஏ.ஐ.சி.சி.டி.யு., சார்பில், நடைபயணம் மற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து ஏ.ஐ.சி.சி.டி.யு., அகில இந்திய தலைவர் குமாரசாமி கூறியதாவது:தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைக்கின்றனர். வார விடுமுறை, சம்பளத்துடன் கூடிய விடுமுறை, எட்டு மணி நேரத்துக்கும் அதிகமான வேலைக்கு இரட்டிப்பு கூலி, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் இல்லாமல், மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்கின்றனர்.தமிழக விசைத்தறி பட்டறைகளில் தொழிற்சாலைகள் சட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக நடப்பு சட்டசபை தொடரில், 1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டப்பிரிவு 85(1)ன் கீழ் அரசாணை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.இதற்காக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி ஈரோட்டில் துவங்கி நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தும், ஒரு லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கமும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் நிறைவு விழா, கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம், சேலம் அம்மாபேட்டை மைதானத்தில் நடக்கிறது.கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், கோட்டை முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.