ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை
ADDED : ஜூன் 23, 2024 01:03 PM

புதுடில்லி: கஜகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. பார்லி., கூட உள்ளதால், அவருக்கு பதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
கஜகிஸ்தானின் அஸ்தானா நகரில் ஜூலை 3 மற்றும் 4 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், சீன அதிபர்ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று பங்கேற்று வருகிறார். அதனால், இந்த ஆண்டும் அவர் பங்கேற்பார் என தகவல்கள் வெளியானது. ஆனால், லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பார்லிமென்ட் கூட்டம் நடைபெற உள்ளதால், இந்த கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார்.